இன்றைய போட்டோஷாப்பில் முகப்பரு -தழும்பு - சிறிய வெட்டுக்காயம் ஆகியவற்றை எப்படி நீக்குவது என காணலாம். முதலில் முகப்பரு உள்ள புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள்.
(நான் பிரபல நடிகையின் மேக்கப் போடுவதற்கு முன் உள்ள புகைப்படத்தை எடுத்துள்ளேன்.நடிகை யார் என்று கண்டுபிடித்து கருத்துரையில் சொல்லுங்கள் பார்க்கலாம்)
இப்போது 7 ஆவதாக உள்ள டூலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதில் கர்சரை வைத்ததும் அதில் முதலில் உள்ள Spot Healing Brush Tool தேர்வு செய்யுங்கள்.
இப்போது புகைப்படத்தில் முகப்பரு உள்ள இடத்தை நான் சுட்டி காட்டியுள்ளேன். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இப்போது செல்ட் செய்த டூலை முகத்தில் நன்றாக உள்ள இடத்தில் வைத்து ஆல்ட் கீயை அழுத்துங்கள். சிறிய வட்டம் வரும். பின்னர் கர்சரை எடுத்துவந்து முகப்பரு உள்ள
இடத்தில் அழுத்துங்கள். முகப்பரு நொடியில் மறைந்துவிடும். (எந்த கீரீமும் போடாமலே உங்களுக்கு முகம் அழகாக மாறி விட்டதை காணலாம். ) அதுப்போல் முகப்பரு உள்ள இடங்களில் இதுபோல் செய்யுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
எப்படி மாறிவிட்டதை பார்த்தீர்களா?.....




















பின்னூட்டங்கள்
very nice each of subDownload: eType1.com/f.php?FEtRz1
ject
RSS feed for comments to this post