இன்றைய பாடத்தில் Pattern image பற்றி பார்க்கலாம். Pattern image ஆனது ஒரு படத்தில் குறிப்பிட்ட இடத்தை – குறிப்பிட்ட நபரை தேர்வு செய்து அதை அதிக எண்ணி்க்கையில் சுலபமாக நிரப்ப நமக்கு உதவுகின்றது.
அதற்கு நாம் மானையும் மயிலையும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் மான் படத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.

இதன் image அளவு அகலத்தில் 6.667 மற்றும் உயரத்தில் 8.889 அங்குலத்தில் உள்ளது.

இதில் அதன் முகம் மட்டும் நான் தேர்வு செய்துள்ளேன்.

முன்பே பாடத்தில் சொன்னது போல் மார்க்யு டூலால் கட் செய்து கொள்ளுங்கள். பின்னர் Ctrl+N-ஐ அழுத்தி பின் Enter தட்டுங்கள். உங்களுக்கு புதிய விண்டோ ஓப்பன் ஆகியிருக்கும். அதில் கட் செய்த மானை பேஸ்ட் செய்யுங்கள்.

உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி பழைய படத்தை முடி விடுங்கள். இப்போது ஸ்கீரினில் தலை மட்டும் உள்ள மான கிடைக்கும். அதன் இமேஜ் அளவை அகலம் 2 அங்குலம் உயரம் 3 அங்குலம் என மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு கீழ் கண்டவாறு படம் கிடைக்கும்.

இதை அப்படியே விட்டுவிட்டு இப்போது மேல்புறம் உள்ள Edit கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Define Pattern கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் கொடுத்துள்ள Standard அளவின் படி புதிய விண்டோ ஓப்பன் செய்யுங்கள். நான் அகலத்தில் 10 அங்குலமும் உயரத்தில் 12 அங்குலமும் வைத்து புதிய விண்டோ ஓப்பன் செய்துள்ளேன். இனி நீங்கள் Shift + F5 அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் Use எதிரில்உள்ள கட்டத்தில் Pattern தேர்வு செய்து பின் Custom Pattern எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு மேலே உள்ளவாறு ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் தேர்வு செய்த மானின் படம் முதலில் இருக்கும். அந்த படத்தை தேர்வு செய்து ஓ,கே. கொடுங்கள். கண் இமைக்கும் நொடியில் என்ன நடக்கின்றது என பாருங்கள்.

ஒரு மான் பாருங்கள் - 20 மானாக வந்து விட்டது. இதைப்போல்
இந்த மயிலை பாருங்கள்.

மயிலின் அளவு கீழே கொடுத்துள்ளேன்.

இதில் மயிலின் முகம் மட்டும் கட் செய்துள்ளேன்.

வேண்டிய அளவிற்கு படத்தின் இமேஜை குறைத்துள்ளேன். படம் கீழே..

இதையும் Edit -Define Pattern -O.K. கொடுத்தேன். புதிய விண்டோ ஓப்பன் செய்தேன். அதில் மானை நிரப்பியவாறு மயிலையும் நிரப்பினேன். படத்தை பாருங்கள்.

புதிய பின்னூட்டம்
அன்பான வாசகர்கள் கவனத்திற்கு: இது சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் பகுதி. இதில் இடப்படும் வாசகர் கருத்துக்களுக்கு tamilcomputer.net நிர்வாகம் பொறுப்பேற்காது. இது பின்னூட்டம் என்பதால், தங்கள் கருத்துகளை 6000 எழுத்துகளுக்கு மிகாமல் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். மேலுல்ல ஆக்கங்களுக்கு அமைவாக உங்கள் பின்னூட்டங்களை எழுதவும். தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதியை கொடுத்துள்ளோம். வாசகர்கள் இயன்றவரையில் தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.




















பின்னூட்டங்கள்
RSS feed for comments to this post